Proxy Server என்பது என்ன?

PM 1:48 வழங்கியவர் ameerdeen

இணையத்தில் தட்டுப்படும் சொல் இது. ஈ-மெயில், உலாவி, இவைகளில் ஏதாவது settings செய்யும்போது உங்கள் proxy sever ன் விலாசம் என்ன என்று கேட்கப்படலாம்.
Proxy Server என்பது உலாவிக்கும் வெப்தளங்களை காட்சிக்கு வைத்திருக்கும் Web Server க்கும் நடுவிலுள்ள இடைமுகப்பாகும். அல்லது இடையில் நின்று உங்களுக்கு உதவும் சேவையாகும்.அல்லது ஒரு தரகர் என்று கூட சொல்லலாம். இந்த Proxy server உங்கள் கம்பியூட்டர்
அமைந்துள்ள Local Nerwork இனுள் காணப்படும்.
உலாவி இணையத்தில் ஒரு பக்கத்தை தேடும்போது Proxy server தலையிட்டு உதவமுன்வரும்: தனது சேமிப்பு கிடங்கில் அந்த பக்கம் கிடக்கா என பார்க்கும், கிடந்தால் அங்கிருந்து எடுத்து அனுப்பும். இன்றேல் இணையத்தில் தேடி உரிய Web Server இலிருந்து எடுத்து அனுப்பிவைக்கும்.
X,Y என்ற இரு இந்திய நபர்களுக்கு கனடாவிலுள்ள Web Server ரில் உள்ள ஒரே வெப்பக்கம் தேவைப்படுகிறது. முதலில் X தனது உலாவி மூலம் தேடுகிறார். Proxy Server தலையிட்டு தன்னிடம் தேடி இல்லையென கண்டவுடன் கனடாவிலுள்ள வெப்சர்வரிடமிருந்து பெற்று உலாவி உள்ள
கம்பியூட்டருக்கு அனுப்பி வைக்கிறது. அப்போது பிரதி ஒன்றை தன்னிடம் வைத்துக்கொள்கிறது. பின் Y என்பவர் அதே பக்கத்தை தேடும்போது Proxy Server தன்னிடமுள்ள பிரதியில் இன்னொரு கொப்பியை Y என்பவரின் கணணிக்கு அனுப்பிவைக்கிறது.
Proxy Serverகள் இணையத்தின் போக்குவரத்து நெருக்கடிகளை தளர்த்தி திறனையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகிறது. வேண்டப்படாத
போக்குவரத்துகளை தடுக்கிறது. இணைய சேவை வழங்குனர்க்கு ஒரு Switch Board போலவும் இயங்குகிறது, உங்களுக்கு தேவை ஏற்படும்போது இதன் விலாசத்தை இணைய சேவை வழங்குனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இது பெரும்பாலும் இன்னொரு IP Address ஆக இருக்கும். .

LATEST:

Grab the widget  Tech Dreams