நனைந்தபடி செல்போனில் பேசலாம்

AM 9:42 வழங்கியவர் ameerdeen

இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் போதும். மழையிலோ, பாத்ரூம் ஷவரிலோ நனைந்தபடி செல்போனில் பேசலாம். நீர் புகாத நவீன தொழில்நுட்பத்தால் செல்போன்கள் நீரில் நனைந்தாலும் பாதிப்படையாமல் இயங்கும் வசதி விரைவில் வருகிறது.

இதற்கான தொழில்நுட்பத்தை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ரசாயன தாக்குதல்களில் இருந்து வீரர்களைக் காக்க ராணுவம் நவீன தொழில்நுட்பத்தைக் கையாள்வதுபோல செல்போனை நீரில் இருந்து பாதுகாக்க தொழில்நுட்பம் ஏற்படுத்தப்படும்.

அதற்காக போனின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத நீர் தடுப்பு பூச்சு ஏற்படுத்தப்படும். அதன்மீது நீர் பட்டாலும் ஒட்டாமலும், உள்ளே புகாமலும் வழிந்தோடி விடும். அதன்மூலம், செல்போனுக்குள் நீர் புகுந்து சர்க்யூட்களை சேதப்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட்டு விடும். நீர் தடுப்பு பூச்சு பூசப்பட்ட செல்போன், மழை, பனி, தவறுதலாக நீரில் விழுதல், வியர்வை ஆகியவற்றால் பாதிக்கப்படாது.

LATEST:

Grab the widget  Tech Dreams