செயற்கைத் தோல்

AM 9:41 வழங்கியவர் ameerdeen

பாலிமர் மற்றும் கார்பன் நானோ டியூப்கள் மூலம், நோயாளிகள் மற்றும் ரோபோக்களுக்கு பொருத்தக் கூடிய செயற்கைத் தோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தோல், சூடு, குளிர், அழுத்தம் போன்றவற்றை மூளைக்கு உணர்த்தக் கூடியது.அமெரிக்காவை சேர்ந்த ஓக் தேசிய பரிசோதனைக் கூடத்தில், மூத்த விஞ்ஞானிகள் ஜான் சிம்சன், இலியா இவனோவ் இதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செயற்கைத் தோல், தண்ணீர் உட்புகாத, மேல்புறத்தைக் கொண்டது. இந்த தோல், மடியக்கூடிய, எடை குறைந்த, பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடலால், இது, வேற்றுப் பொருள் என்று பிரித்துப் பார்த்து நிராகரிக்கப் படாது. மனிதருக்கு பொருத்தப்படும் போது, அதை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், உடல் ஏற்றுக்கொள் ளும். நோயாளியின் உணர்வு நரம்புகளுடன், நானோ டியூப்கள் இணைக்கப்படும் போது, உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் செல்லவும், மூளையின் கட்டளையை ஏற்கும் வகையிலும், செயற்கைத் தோல் செயல்படும்.

தற்போது பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைத் தோல், பரிசோதனையில் முழுமையான வெற்றியடைந்துள்ளது. "சாதாரணமாக மனிதர்களின் உடலில் உள்ள தோலைவிட, இது கூடுதல் உணர்ச்சிகளை அறியக்கூடியது' என்கிறார் இதை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானி ஜான் சிம்சன்.

LATEST:

Grab the widget  Tech Dreams