CD ரைட் பண்ணுவதை எப்படி வேகபடுத்துவது?

PM 3:02 வழங்கியவர் ameerdeen

CD Drive, CPU வின் தலையீடில்லாமல் மெமறியை எழுதவோ வாசிக்கவோ முடிந்தால் CD சுடுவது வேகமாக நடைபெறும். தவிர வேகம் என்பது CD டிறைவின் வேக பெறுமதியையும் பொறுத்தது. இதை Xல் கணக்கிடுவார்கள். X என்பது ஆரம்பத்தில் வெளிவந்த CD Rom டிறைவின் வாசிக்கும் வேகமாகிய 150 கி.பைட்ஸ்/செ. ஆகும். இப்போது வெளிவருகின்ற CD Rom டிறைவுகளின் உச்ச வேகம் 72X கொண்டவைகளாகவுள்ளன. அதாவது 72x150 கி.பை/செ என்பதாகும். சில CD - R டிறைவுகளின் முகப்பில் 48X/24X என காணப்படும். இதில் முதலாவது வாசிக்கும் வேகம். இரண்டாவது எழுதும் வேகமுமாகும். இன்னும் சிலவற்றில் 48X/24X/12X என காணப்படும். இதில் 12X எனப்படுவது சிடியை அழித்து திருப்பி எழுதும் வேகமாகும். இம்மூன்றில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவெனில் கூடிய பெறுமதியுடைய எண் வாசிக்கும் வேகத்தையும், அடுத்த பெறுமதியுடைய எண் எழுதும் வேகத்தையும், குறைந்த பெறுமதியுடைய எண் அழித்து எழுதும் வேகத்தையும் காட்டுகின்றது என்பதாகும்.

ஆரம்பத்தில் பாடல்களை பதிவு செய்ய ஓடியோ சீடி (Audio CD-Rom) தொழில்நுட்பம் 1980ல் உருவானது. பின்பு இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கம்பியூட்டர் உலகில் விலைகூடிய இயந்திரங்களைக்கொண்டு Data வை பதிவு செய்தார்கள். அடுத்து சாதாரண பாவனையாளருக்காக மலிவு விலையில் வாசிக்க மாத்திரம் உதவும் CD-Rom drive உருவானது. பின்பு மென்தட்டு போல எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் 1990ல் ஏற்பட்டதே CD-R drive. இதை மேலும் மேம்படுத்தி CD-RW drive வை உருவாக்கினார்கள். இந்த drive கள் ஒரு கண்ணாடியையும் லேசர் கதிரையும் பாவித்தே டிஸ்க் ஐ வாசிக்கின்றன.

CD -Compact Disc- 12 cm விட்டமுடையதாகும். 650-700 மில்லியன் பைட்ஸ் வரை கொள்ளக்கூடியது. டிஸ்க் களில் CD-R, CD-RW, Music CD-R என மூன்று வகையுண்டு.

இப்போது CD Drive CPU வின் தலையீடில்லாமல் எழுத, வாசிக்க வேண்டிய செற்றிங் என்னவென பார்ப்போம். இச்செயலை DMA - Direct Memory Access - என்பார்கள். "My Computer" ஐ வலது கிளிக் செய்து பின் Properties, Hardware Tab, Device Manager, இவைகளை கிளிக் செய்து, IDE ATA/ATAPI என்பதன் முன்னுள்ள ப்ளஸ் அடையாளத்தை கிளிக் செய்து, Primery IDE Chl என்பதில் வலது கிளிக் செய்து, Properties என்பதில் கிளிக் செய்து, Advance Settings என்பதை கிளிக்பண்ணி, Transfer Mode என்ற பெட்டியில் "DMA if available" என்றிருந்தால் அப்படியே விட்டுவிடவும். "PIO only" என்றிருந்தால் பெட்டியின் வலபக்க முக்கோணத்தை கிளிக் செய்து "DMA if available" என்பதை தேர்வு செய்யவும். கம்பியூட்டரை reboot பண்ணவும். Pio-Programmable Input/output- என்பது பழைய மிகவும் மெதுவான தரவு பரிமாற்றம் செய்யும் முறையாகும்

CD - Rom என்பது Compact Disc - Read Only Memory
CD - R என்பது Compact Disc - Recordable
CD - RW என்பது Compact Disv - Rewriteable
DVD - என்பது Digital Versatile Disc

CD யில் Data வை பதிவு செய்து (மிக நுண்ணிய குழி 1 எனவும், குழி அல்லாத மேடு 0 என பைனறியில் பதிவு செய்தல்) விட்டு லேசர் கதிரால் சூடேற்றி கடினப்படுத்துவதால் "CD Burning" எனப்படுகின்றது. அழித்து எழுதும்போது இப்பகுதி மீண்டும் மென்மையாக்கப்பட்டு, எழுதப்பட்டு, மீண்டும் சூடேற்றப்படுகிறது.

LATEST:

Grab the widget  Tech Dreams