இணைய பக்கத்தை எடிட் செய்ய

AM 7:26 வழங்கியவர் ameerdeen

நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் இணைய தளத்தை லைவ் -ஆகா edit செய்ய, கீழே உள்ள code-ஐ copy செய்து உங்கள் address bar -இல் பேஸ்ட் செய்யவும்.
javascript: document.body.contentEditable = 'true';document.designMode = 'on'; void 0
அதன் பிறகு, அந்த இணைய தளத்தை நீங்கள் வேர்ட்-இல் எடிட் செய்வது போல் எடிட் செய்யலாம்..
உதாரணத்திற்கு தினதந்தி வெப்சைட்-இல் உங்களைப்பற்றிய செய்தியை நீங்கள் எடிட் செய்து (அல்லது உருவாக்கி) கொள்ளவும் . பின் அந்த screen-shot எடுத்து நண்பர்களுக்கு மெயில் அனுப்பி பீலா கட்டலாம்.

நீங்கள் பேசியதை சுலபமாக மற்றவருக்கு

AM 7:25 வழங்கியவர் ameerdeen

ஒருமுறை சென்று பாருங்கள்..
நண்பர்களே நீங்கள் பேசிய பேச்சை மற்றவர் தெரிந்துக்கொள்ள இதோ ஒரு வாய்ப்பு..
இதில் நீங்கள் பேசிய ஆடியோ செய்தியே மற்றவருக்கு அனுப்ப எளிய வசதி..
மிக சுலபம்..
இங்கே சுட்டுக..
http://www.freegabmail.com/Composer/Composer.html

மணி காட்டும் மனிதர்கள்....விந்தை

AM 7:24 வழங்கியவர் ameerdeen

http://billychasen.com/clock/

தமிழ் எம்பி3 பட்டிமன்றங்கள்.

AM 7:21 வழங்கியவர் ameerdeen

தமிழ்ப் பட்டி மன்றங்களின் பதிவுகள் - சாலமன் பாப்பையா - லியோனி இவர்களின் பங்களிப்பில் உருவானவை.
திண்டுக்கல் ஐ. லியோனியின் நகைச்சுவைப் பட்டிமன்றங்கள்.சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றங்களின் ஒலிக்கோப்புகள் எம்பி3 டைப்பில்
தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்
1. 60 ஆண்டு கால சுதந்திரத்தில் நாம் அடைந்தது சாதனையா? சோதனையா?
2. 75 ஆண்டு கால திரைப்பட வரலாற்றில் நாம் கண்டது சோதனையா? சாதனையா?
3. சினிமா பெண்களைச் சிறுமைப்படுத்துகிறதா? பெருமைப்படுத்துகிறதா?
4. சினிமாவானது சமூகத்தைச் சீர்படுத்துகிறதா? சீரழிக்கிறதா?
5. கிராமமா? நகரமா? எது சிறந்தது?
கூட்டுக் குடித்தனமா? தனிக்குடித்தனமா?
6. குடும்பத்தின் மகிழ்ச்சிக்குக் காரணம் மகளா? மகனா?
7. நகைச்சுவையின் நோக்கம் சிரிக்கவைப்பதா? சிந்திக்க வைப்பதா?
8. எந்த மகளிரணி சந்தோசமான வாழ்வு வாழ்கிறார்கள். சுதந்திரத்துக்கு முன்னர் சுதந்திரத்துக்கு பின்னர் ?
9. பணமா? குணமா?
10. பட்டுக்கோட்டையா? கண்ணதாசனா?
11. பழைய பாடலா? புதிய பாடலா?
12. சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ச்சி கண்டோமா? வீழ்ச்சி கண்டோமா?
13. தமிழின் வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு - திரையுலகமா? பொதுமக்களா?
14. உறவுகளால் நெருக்கடியா? நிம்மதியா?
15. யார் சிறந்தவர்கள் - உழைப்பாளிகளா? படிப்பாளிகளா?
16. வீட்டுச்சூழலா? நாட்டுச்சூழலா? எது காரணம் - இளைஞர்கள் முன்னேறாமல் இருப்பதற்கு
17. எவனோ ஒருவன் - சத்தியராஜ் நடுவராக - பட்டி மன்றம்
 
கேட்டு மகிழுங்கள்.
http://www.4shared.com/dir/4663000/a3feb7c3/sharing.html

டொமைன் ரகசியம் .tk

AM 7:18 வழங்கியவர் ameerdeen

குறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா?
குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான, விதிகளுக்கு விரோதமான செயல் என்பதே ஒரு பொதுக் கருத்தாக இருப்பதால் இவை நேர்மை யானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் குறுக்கு வழிகள் புதிய வழியாக இருக்கும் பட்சத்தில் அவை நேர்மையாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதெப்படி என்று கேட்பவர்கள், "டாட் டிகே' மூலம் தானும் சம்பாதித்து ஒரு நாட்டுக்கும் வருவாயை தேடித் தரும் டச்சு தொழிலதிபரான ஜூஸ்ட் ஜூர்பியர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
.
ஜூர்பியர் பணம் சம்பாதிக்க தேர்வு செய்திருக்கும் முறையை குறுக்கு வழி ஆனால் நேர்மையான குறுக்கு வழி என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. எதையுமே செய்யாமல் எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் அதிக முதலீடுமின்றி, சுலபமாக பணத்தை அல்லது பலன்களை அள்ளிக் குவிப்பது என்பதே குறுக்கு வழிக்கான இலக்கணமாக இருக்கிறது.
ஜூர்பியரும் இப்படித்தான் பணம் சம்பாதிக்கிறார். அவரது வர்த்தக திட்டம் பற்றி ஒரே வரியில் சொல்லி விடலாம். "டாட் டிகே' எனும் முகவரியின் உரிமையை பதிவு செய்து கொண்டு, அந்த முகவரியில் கூடுதலாக பதிவு செய்யப்படும் ஒவ்வொரு முகவரிக்கும் அவர் வருவாயை தேடிக் கொண்டிருக்கிறார்.
இது எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள டொமைன் பெயர் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இன்டெர்நெட் முகவரிகள் பொதுவாக டொமைன் பெயர் என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பல ரகம் உண்டு. பரவலாக அறிந்த டாட் காம்ஐ தவிர டாட் ஓஆர்ஜி, டாட் நெட் போன்ற முகவரிகளும் இருக்கின்றன. இதைத் தவிர ஒவ்வொரு நாட்டின் பெயரை குறிக்கும் சுருக்கத்தை கொண்ட முகவரிகளும் இருக்கின்றன.
உதாரணத்திற்கு இந்திய முகவரிகள் என்றால் டாட் இன். பிரிட்டன் முகவரிகள் என்றால் டாட் யு.கே. ஆஸ்திரேலிய முகவரி என்றால் டாட் ஏ.யு. இவை சம்பந்தப்பட்ட நாடு களுக்கான பிரத்யேக இணைய முகவரிகள். டொமைன் பெயர்கள் வரலாற்றில் அவற்றில் முக்கியமானதாக கருதக் கூடியவற்றை முதலிலேயே பதிவு செய்து கொண்டு பின்னர் அதற்கு தொடர்புடையவர்கள் அதனை கேட்டு வந்தபோது பேரம் பேசி அதிக பணம் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்.
இதற்கு ஏறக்குறைய தடை விதிக்கப்பட்டு விட்டது. இதை தவிர டொமைன் தயாரிப்புகள் மூலம் சம்பாதிக்க மற்றொரு சுவாரசியமான வழி இருக்கிறது. அது பிரபலமாக இருக்கக் கூடிய இணையதளங்கள் போல தோன்றக் கூடிய ஆனால் சிறிய வேறுபாட்டை கொண்ட முகவரிகளை பதிவு செய்து கொள்வது.
இணைய முகவரிகளை டைப் செய்யும்போது கை தவறி ஒரு எழுத்து கூடுதலாக அல்லது குறைவாக அல்லது மாறி அடித்து விடுவது உண்டல்லவா. அப்போதெல்லாம், நாம் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த எழுத்து தொடரக் கூடிய இணையதளம் எட்டிப் பார்த்து வியக்க வைக்கும். அந்த தளத்தில் அநேகமாக அதிக விவரங்கள் இருக்காது.
ஒரு சில தகவல்கள் பட்டியலிடப்பட்டு ஏதாவது இணைப்புகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் நிச்சயமாக கூகுல் விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த விளம்பரங்களில்தான் விஷயமே இருக்கிறது. கூகுல் விளம்பரங்களில் க்ளிக் செய்யப்படும் ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு ஒரு சிறிய தொகை வருவாயாக கிடைக்கும்.
இந்த விளம்பர முறை கூகுலுக்கு வருவாயை அள்ளித் தந்து கொண்டிருக்கிறது. கூகுலுக்கு மட்டுமல்ல; அதனோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் இணையதளங் களுக்கும் இது சீரான வருவாயை தருகிறது. இத்தகைய விளம்பரங்களுக்கு உள்ளடக்கம் சார்ந்த விளம்பரம் என்று பெயர். அதாவது இணையப் பக்கத்தில் இடம் பெற்றிருப்பதற்கு பொருத்தமான
இணையதளங்களில் விளம்பர இணைப்புகள் இடம் பெற்றிருக்கும். அந்த பக்கத்தை படிப்பவருக்கு ஆர்வமுட்டக் கூடிய வகையில் இருக்கும் என்பதால் மாமூலான, பொதுவான விளம்பரங் களை விட இவை க்ளிக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் பொதுவான விளம்பரங்கள் எரிச்சலூட்டக் கூடும். இந்த விளம்பரங்கள் அவற்றின் பொருத்தம் காரணமாக பயனுள்ள இணைப்புகள் போலவே கருதப்படும்.
எனவே முன்னணி தளங்கள் உட்பட பல தளங்கள் இந்த விளம்பரங்களை விரும்பி பயன்படுத்தி வருகின்றன. இந்த முறையையே மற்ற இணைய தளங்களும் புத்திசாலிதனமாக பயன்படுத்தி வருகின்றன.
முன்னணி தளங்களுக்கு இவை கூடுதல் வருவாய்க்கான வழியாக அமைந்திருக்கின்றன.
நிற்க! ஒரு சில புத்திசாலிகள் இத்தகைய விளம்பரங்களை இடம் பெற வைப்பதற்காக என்று பெயருக்கு என்று ஒரு இணைய தளத்தை நடத்தி அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வருகின்றனர். அநேகமாக இவை உள்ளடக்கம் ஏதும் இல்லாமல் வெறுமையாகவே இருக்கும். இந்த வெற்று இணைய தளங்களை தேடி இணையவாசிகளை வர செய்வதற்கு சுலபமான வழி இருக்கிறது. அதுதான் குறுக்கு வழி.
.
கூகுல் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுவதற்காக நடத்தப்படும் உள்ளடக்கமில்லா வெற்று தளங்களை நோக்கி இணையவாசிகளை வருகை தர வைப்பதற்காக என்று மிகவும் சுலபமான வழி இருக்கிறது. அது, சாமர்த்தியமாக இணையதள முகவரிகளை தேர்வு செய்து பதிவு செய்வது. உதாரணமாக ஒரு சில பெயர்களின் மூலமே, அது மகத்தானதாக இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்தி விடலாம்.
அத்தகைய பெயர்களை யோசித்து இணையதள முகவரிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். அல்லது பிரபலமான இணையதளத்திற்கு இணையான வேறு மாற்று முகவரிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். தேடியந்திரங்களில் தேடும் போது அல்லது முகவரிகளை மாற்றி டைப் செய்யும் போது இந்த இணைய தளங்களுக்கு இணையவாசிகள் வருகை தர நேரிடும்.
அப்போது உள்ளடக்கம் இல்லாமல் அவர்கள் ஏமாந்து திரும்புவதால் ஒன்றும் நஷ்டம் இல்லை. அவர்களில் 10ல் ஒருவர் அல்லது நூறில் ஒருவர், ஏன் ஆயிரத்தில் ஒருவர் இந்த தளங்களில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்தால் போதும் வருவாய் வந்து விடும்.
இத்தகைய சாமர்த்திய முகவரிகள் பலவற்றை பதிவு செய்து கொண்டால் அதிக வருவாய் பார்க்கலாம்.
இப்படி பலர் செய்து வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் கோடீஸ்வர அதிபர்களாகி இருக்கின்றனர். அதிக உழைப்பின்றி பணம் சம்பாதிப்பதால் இவையும் குறுக்கு வழிதான். ஆனால் இவற்றில் எந்த சட்ட விரோதமான செயலும் இல்லை. மற்றவர்கள் பரவலாக அறிந்திராத நடைமுறையை புத்திசாலிதனமாக பயன்படுத்திக் கொள்ளும் செயல் மட்டுமே.
எனவே இவற்றை நேர்மையான குறுக்கு வழி என்று சொல்லலாம்.
டொமைன் பெயர் மூலம் சம்பாதிப்பதிலேயே மற்றொரு வழி இருக்கிறது. அது நாடுகளுக்கு உரிய டொமைன் உரிமை பதிவு செய்யப்படாமல் இருக்கிறது என்று தெரிந்தால் அதனை ஒட்டு மொத்தமாக பதிவு செய்து கொண்டு, அதன் பிறகு அதன் மூலம் வருவாயை பெருக்கிக் கொள்வது. அந்த நாடுகளுக்கான இணைய முகவரிகள் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு முறையும் அதன் மூலம் வருவாய் வந்து கொண்டிருக்கும்.
அதெப்படி ஒரு நாட்டுக்கான முகவரியின் உரிமையை பதிவு செய்யாமல் இருப்பார்கள். விஷயம் தெரிந்த உடனேயே பெரிய நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் போட்டிப் போட்டு கொண்டு பதிவு செய்து கொண்டு விடாதா? வாஸ்தவம்தான். முன்னணி நாடுகளின் பெயர் உரிமைகள் இப்படி உடனேயே பதிவு செய்யப்பட்டு விட்டன. மற்ற நாடுகளும் விழித்துக் கொண்டு பெயர் உரிமையை பதிவு செய்து கொண்டு விட்டன. ஆனால் பெயர் தெரியாத உலகம் அறியாத நாடுகள் சில இருக்கின்றன.
அவற்றுக்கு டொமைன் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விஷயம் தெரியவில்லை. அந்த பெயரில் டொமைன் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்ற விஷயம் மற்றவர்களுக்கும் தெரியவில்லை. உண்மையிலேயே இப்படி பல நாடுகள் இருக்கின்றன.
அத்தகைய அபூர்வ நாடுகளில் ஒன்றுக்கான டொமைன் பெயர் உரிமையை டச்சு தொழிலதிபர் ஜூஸ்ட் ஜூர்பியர் பதிவு செய்து வைத்துக் கொண்டார். இப்போது இந்த நாடுகளின் முகவரி யில் அமைக்கப்படும் ஒவ்வொரு இணையதள முகவரிக்கும் அவருக்கு வருவாய் கிடைத்துக் கொண்டி ருக்கிறது. ஆனால் இதனை அவர் முற்றிலும் நேர்மையான முறையில் பயன்படுத்தி வருகிறார்.
நேர்மையான முறையில் மட்டு மல்ல, பாராட்டக் கூடிய வகையிலும் தான். சொல்லப் போனால் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கே அவர் உதவுகிறார். அடிப்படை வசதிகள் அதிகமில்லாத ஒரு நாட்டுக்கு தகவல் தொடர்பு வசதியை அவர் தேடி தந்து தானும் வளமாகி தன்னை வளமாக்கிய நாட்டுக்கும் செல்வத்தை பெற்றுத் தந்து வருகிறார்.
உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த விவரம் தெரியும். பசுபிக் மகா கடலில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டமாக இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கான இணையதள முகவரி டாட் டிகே என்று முடிகிறது. இந்த முகவரிக்கான உரிமையைத் தான் ஜூர்பியர் தனது பெயரில் பதிவு செய்து வைத்துக் கொண்டார்.
.
ஆனால் இந்த முகவரியை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை பெற அவர் மிகவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது. காரணம் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருக்கிறதா? என்பது இணைய முகவரிகளை பதிவு செய்யும் மூல அமைப்பான ஐகானுக்கே தெரியவில்லை. எனவே இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஜூர்பியர் இல்லாத நாட்டின் பெயரை குறிப்பிட்டு கதை விடுகிறாரா என்று சந்தேகப்பட்டனர்.
பின்னர் ஜூர்பியர் அரும் பாடுபட்டு அந்த நாட்டின் இருப்பை நிரூபித்து அதற்கான உரிமையை பெற்றுக் கொண்டார். உண்மையில் 2001ம் ஆண்டு டொமைன் பெயர் உரிமையில் முதலீடு செய்ய அவர் முடிவு செய்த போது நான்கு நாட்டு முகவரிகளை பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது.
அவை பாலஸ்தீனம், கிழக்கு தைமூர், பிட்கைரன் மற்றும் டோகேலா. அதாவது இந்த நான்கு நாடுகளின் முகவரி உரிமையும் பதிவு செய்யப்படாமலேயே இருந்தது. பாலஸ்தீனம் மற்றும் கிழக்கு தைமூர் இரண்டுமே பிரச்சனை பூமிகளாக இருப்பதால் அந்நாடுகளின் முகவரிகள் பதிவு செய்யப்படாமல் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியது.
தினசரி வாழ்க்கையே செத்துப் பிழைக்கும் அனுபவமாக இருக்கும் போது டொமைன் பெயர் பற்றியெல்லாம் யோசிக்க யாருக்கு தோன்றும். இவற்றில் டோகேலா பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று ஜூர்பியர் தீர்மானித்தார். பதிவு செய்து கொண்டதுமே டாட் டிகே எனும் பெயரில் ஒரு திட்டத்தையும் தொடங்கினார்.
முன்னணி நிறுவனங்களை டிகே எனும் பதத்தோடு முடியும் முகவரிகளை பதிவு செய்து கொள்ள ஊக்குவிக்கும் திட்டமாக இது அமைந்தது. இந்த பெயரில் முகவரிகள் பதிவு செய்து கொள்ளப்படும் போது அவருக்கு ஒரு வருமானம் கிடைக்கும். அந்த பெயரில் உள்ள தளங்களில் கூகுல் விளம்பரங்களை இடம் பெற செய்து அதன் மூலமும் வருமானத்தை பெற முடியும்.
இவ்வாறு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை அவர் டோகேலா நாட்டிற்கு வழங்கி விடுகிறார். அதுதான் டாட் டிகே திட்டத்தின் முக்கிய பகுதி. இந்த திட்டம் டோகேலா நாட்டின் பொருளாதாரத்திற்கு பக்கபலமாக நிற்கும் வகையில் அமைந்துள்ளது. பசுபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் இந்த தீவுக் கூட்ட நாட்டில் அதிகம் போனால் 1500 பேர் இருப்பார்கள். இந்த நாட்டில் உள்ளவர்களை விட இந்த நாட்டிலிருந்து வெளியே போய் வசிக்கும் டோகேலாவாசிகள்தான் அதிகம்.
நியூசிலாந்து நாட்டுக்கு அருகே உள்ளது இந்நாடு. அரசியல் ரீதியாக தனி நாடு அந்தஸ்து இல்லை. நியூசிலாந்துக்கு கீழ்பட்ட தன்னாட்சி உரிமை கொண்ட நாடாக இது அமைந்துள்ளது. நிதியுதவி உட்பட பல விஷயங் களுக்கு இந்நாடு நியூசிலாந்தைத் தான் நம்பி இருக்கிறது. 1994 வரை இந்நாடு தகவல் தொடர்புக்கு ரேடியோ தொலைபேசித்தான் நம்பி இருந்தது. அதன் பிறகு செயற்கைக் கோள் தொலைபேசிக்கு மாறியது. ஆனால் டாட் டிகே திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அந்நாட்டில் இன்டெர்நெட் தொலைபேசி வசதி சாத்தியமானது.
அதற்கு முன்பு இந்நாட்டில் மொத்தமே 12 கம்ப்யூட்டர்கள்தான் இருந்தன. ஆனால் டாட் டிகே வருவாய் மூலம் இன்டெர்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 200ஐ தொட்டது. அது மட்டுமல்லாமல் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இணையதளங்களின் மூலம் பாடல்களை டவுன்லோடு செய்வது, மை ஸ்பேஸ் போன்ற தளங்களை பார்ப்பது ஆகிய செயல் களிலும் ஈடுபட தொடங்கினர்.
இன்று இந்த நாட்டிற்கான பொருளாதாரத்தில் 10 சதவீத நிதி டாட் டிகே திட்டத்தின் மூலம் கிடைத்து கொண்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற வேண்டும் எனும் நோக்கத்தை இந்த திட்டம் நிறைவேற்றி வருவதாக டோகேலா நாட்டை சேர்ந்தவர்கள் பெருமைப்படுகின்றனர். இதற்காக இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிந்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் பஃகா பேட்டாய் என்கின்றனர். அதாவது அவர்கள் மொழியில் நன்றி என்று அர்த்தம்.
இப்படியாக ஜூர்பியர் டாட் டிகே முகவரிகளை பதிவு செய்வதன் மூலமே வருவாயை தேடிக் கொண்டு வருகிறார். இது குறுக்கு வழிதான். ஆனால் ஒரு நாட்டுக்கே உதவும் நியாயமான குறுக்கு வழி.

உலக சாதனை உங்கள் கையில்...

AM 7:17 வழங்கியவர் ameerdeen

உலக சாதனைகளை தெரிந்து வைத்துக் கொள்வது மட்டுமல்ல, உலக சாதனையையே உங்களால் தீர்மானிக்க முடியும் என்று சொன் னால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் அற்புதமான தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் உறுப்பினராகி உலக சாதனைகளை நீங்களே முடிவு செய்யலாம்.
உலக சாதனை என்றவுடன் கின்னஸ் புத்தகம்தான் நினை வுக்கு வரும். கின்னஸ் புத்தகம் பல்வேறு பிரிவுகளில் உலக சாதனைகளை அங்கீகரித்து அது பற்றி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது அத்தனை எளிதல்ல. எல்லாவிதங்களிலும் சாதனை பற்றிய விவரங்களை உறுதி செய்து கொண்டே கின்னஸ் சாதனை முயற்சிகளை அங்கீகரிக்கிறது. நீங்கள் கின்னஸ் புத்தகத்தின் அபிமானியாக இருக்கலாம். அதில் இடம் பெற்றுள்ள அநேக சாதனை களை விரும்பி படித்து இருக்கலாம்.
இந்த அளவும் கூட கின்னஸ் சாதனை புத்தகத்தில் புதிதாக இடம் பெறும் சாதனைகள் உலக ளவில் பரவலான கவனத்தை பெறுகின்றன. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான சாதனை முயற்சி களும், பத்திரிகை மற்றும் நாளி தழ்களின் கவனத்தை ஈர்க்கின்றன. சாதனைகளுக்கு அப்படியொரு மதிப்பு மற்றும் வரவேற்பு இருக்கிறது.
ஆனால் பல சாதனைகள் குறித்து உங்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். இந்த நிலை யில்தான் உலக சாதனைகளை உங்கள் கைகளுக்கே கொண்டு வரும் வகையில் ரிக்கார்டு கப் டாட்காம் தளம் http://www.recordcup.com
தொடங்கப் பட்டுள்ளது.
இந்த தளத்தில் சாதனைகளை தீர்மானிக்க நீங்கள் சாதனையாள ராக இருக்க வேண்டும் என்ற அவசிய மில்லை. ஆனால் சாதனை என்று நினைக்கும் விஷயத்தை இங்கே அங்கீகாரம் பெற வைக்கலாம். அதாவது உலக சாதனையை நீங்களே தீர்மானிக்க முடியும்.
அதெப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். அதுதான் இன் டெர் நெட்டின் தனித்தன்மை.
தற்போது இன்டெர்நெட் உலகில் டிக் டாட் காம் இணைய தளம் மிகவும் பிரபலமாக இருப் பதை நீங்கள் அறிந்திருக்கலாம். உண்மையில் இந்த டிக் டாட் காம் இன்டெர்நெட்டில் புதிய போக்கை ஏற்படுத்திய முன்னோடி தளம்.
எந்த வகையான செய்திகள் முன்னிலை பெறுகின்றன என்பதை தீர்மானிக்கும் ஆற்றலை வாசகர்கள் கையிலேயே கொண்டு வந்து தந்த தளம் இது. செய்தி தளங்கள் முன் வைக்கும் செய்திகளை அப்படியே படிக் காமல், எந்த செய்தியை படிப்பது என்பதை இணையவாசிகளே முடிவு செய்யும் வகையில் இந்த தளம் செயல்பட்டு வருகிறது.
இந்த தளத்தின் செயல்பாட்டு முறை மிகவும் எளிதானது. இணைய வாசிகள் தாங்கள் முக்கியமாக கருதும் செய்தியை இந்த தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இணையவாசிகள் அந்த செய்தி யின் முக்கியத்துவம் குறித்து வாக்களிப்பார்கள்.
அதிக வாக்கு பெறும் செய்தி தளத்தின் முகப்புப் பக்கத்தில் இடம் பெறும். வாக்குகளை பெறத் தவறும் செய்தி பின்னுக்கு தள்ளப் பட்டு விடும்.
இவ்விதமாக இணையவாசி களே ஒரு சமூகமாக இணைந்து அவர்கள் தீர்மானிக்கும் செய்தி களே முன் வைக்கப்படுகிறது. இந்த தளம், செய்திகள் வெளி யிடப்படும் விதத்தில் புரட்சிகர மான மாற்றத்தை ஏற்படுத்தியி ருப்பதாக கருதப்படுகிறது. இந்த பாணியை பின்பற்றி பல் வேறு தளங்கள் உருவாகியுள்ளன. இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பது தான் ரிக்கார்டு கப் டாட் காம்.
இணையவாசிகள் தாங்கள் உலக சாதனை என்று கருதும் விஷயத்தை இந்த தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான வீடியோ ஆதாரத்தையும் இடம் பெற செய்ய வேண்டும்.
பின்னர் மற்ற இணையவாசிகள் அந்த சாதனை மீது வாக்களிப் பார்கள். போட்டி சாதனை இருந் தால் அதனையும் சமர்ப்பிப்பார் கள். எந்த சாதனை வெற்றி பெறு கிறதோ அது உலக சாதனையாக அங்கீகரிக் கப்படும்.
இவ்விதமாக யார் வேண்டுமானாலும் உலக சாதனையை சமர்ப்பிக்கலாம். தற்போது உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர் யார்? உயரமான கட்டிடம் எது? அழகான வாரிசு யார் என்பது போன்ற போட்டிகள் இந்த தளத்தில் அரங்கேறி வருகிறது.
உலக சாதனையை முற்றிலும் ஜனநாயகமயமாக்கி இருப்பதாக இந்த தளத்தை பாராட்டலாம்.
சுவாரசியமாக பொழுதை கழிக்க விரும்புபவர்கள் இந்த தளத்திற்கு சென்று இங்குள்ள உலக சாதனைகளையெல்லாம் படித்து, பார்த்து மகிழலாம்.

குப்பை மெயில்கள் - குறைக்கும் வழி

AM 7:16 வழங்கியவர் ameerdeen

1.நமது ஈமெயில் முகவரிகளை பொதுவான இடங்களில் உபயோகிப்பதை குறைக்க வேண்டும்.
உதாரணமாக செய்திகள் வெளியிடும் போது(News Group) அல்லது உரையாடல் செய்யும் போது,மேலும் சில வலைத்தளங்களை பார்வையிடும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
2.சில சமயங்களில் நமது ஈமெயில்களை பொதுவான இணையதளங்களில் கொடுக்க வேண்டாம்.
3.ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஈமெயில் முகவரிகளை பயன் படுத்தலாம்.ஒரு ஈமெயிலை தனிப்பட்ட விஷயத்திற்கும்,மற்றவை அலுவல விசயங்களை பொறுத்து பயன் படுத்தலாம்.
4.ஈமெயில்களை பொதுவான பெயர்களில் உருவாக்கமால்,தனித்தன்மையான பெயரில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
5.ஈமெயில் வடிகட்டி(filter) பயன்படுத்தலாம்.அதன் முலம் நமக்கு வரும் மெயிலகளை ஆராய்ந்து,தேவையற்றதை அழித்து மற்றவை நம்முடைய மெயில் பாக்ஸ்க்கு அனுப்பும்.பில்டர் க்கான சாப்ட்வேர்கள் சந்தையில் உள்ளன.
இதன் முலம் குப்பை மெயிலகளை பெருமளவில் குறைக்கலாம்.

வாங்க! தாஜ்மஹால சுத்திப்பார்க்கலாம்......

AM 7:14 வழங்கியவர் ameerdeen

http://www.msnbc.msn.com/id/6065351

கூகிள் பற்றி சுவையான தகவல்கள்

AM 7:14 வழங்கியவர் ameerdeen


ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.
கேள்வி: இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.
""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்த࠮?ன் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''
இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.
லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.
கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது
நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?
கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

இலவச வலைப்பூ தளங்கள்

AM 7:10 வழங்கியவர் ameerdeen

http://www.blogger.com
http://www.sulekha.com
http://www.wordpress.com
http://www.blogsome.com
http://www.sify.com
http://www.rediffblogs.com
http://www.blogeasy.com
http://www.toadfire.com
http://www.clearblogs.com
http://www.blogstream.com
http://www.msn.com
http://www.yahoo.com
http://www.myspace.com
http://www.livejournal.com/
http://www.xanga.com
http://www.problogs.com
http://www.blog-city.com
http://www.bravenet.com
http://www.tblog.com
http://www.tripod.com

இலவச மின் அஞ்சல் தளங்கள்

AM 7:09 வழங்கியவர் ameerdeen


இலவச மின் அஞ்சல் தளங்கள்
--------------------------------------------------------------------------------
www.hotmail.com
www.gmail.com
www.yahoo.com
www.graffiti.net
www.inbox.com
www.30gigs.com
www.gawab.com
www.rediff.com
www.sify.com
www.indiatimes.com
www.123india.com
www.aol.com
www.bluebottle.com
www.canada.com
www.hushmail.com
மேலும் வரும்.

இலவச வெப் ஹோஸ்டிங் செய்ய

PM 7:02 வழங்கியவர் ameerdeen


www.googlepages.com
www.tripod.com
www.fortunecity.com
www.geocities.com
 
உங்களிடம் ஒரு டொமைன் இருந்தால் இந்த இணையதளங்களிலிருந்து இடத்தை இலவசமாக பெற்று உங்கள் இணைய தளத்தை துவக்கலாம்.

முற்றிலும் இலவச டொமைன் வசதி

PM 7:00 வழங்கியவர் ameerdeen

உங்கள் பெயரில் இலவசமாக டொமைன் பெயர் வேண்டுமா. இங்கு செல்லுங்கள். பெற்ற பிறகு தினமும் குறைந்தது 5 பேர் உங்கள் வலைதளத்திற்கு வராவிட்டால் இந்த இலவச வசதியை திரும்பி பெற்றுக் கொள்வார்கள்.
http://www.dot.tk

வீடியோ எடிட்டிங் மென்பொருள்

PM 6:55 வழங்கியவர் ameerdeen


Avidemux என்ற இந்த இலவச மென்பொருள் வீடியோக்களை எளிதில் வெட்ட ஒட்ட நீக்க, வடிவங்கள் மாற்ற பயன்படும். இது கீழே கண்ட அநேக வடிவங்களில் உள்ள வீடியோவுடன் ஒத்திசையும்.
DVD, VOB, AVI, DivX, XviD, WMV, MPG, MP4, AVI, MOV, MKV, DV, FLV.
ஒரிஜினலாக புரோகிரம் உள்ள தளம்
http://avidemux.sourceforge.net/download.html
Mirror - direct link ரைட் கிளிக் செய்து சேவ் அஸ் என்று கொடுத்தல் போதும்
http://www.videohelp.com/download/av....4.4_win32.exe

பார்க்க கூடாத வெப்தளங்களை நம் கம்ப்யூட்டரில் தடைசெய்யமுடியுமா?

PM 6:54 வழங்கியவர் ameerdeen

உங்கள் iexplore-ல்
tools-->Internet Options---> security ---> restricted sites
இங்கே சென்று..
எந்த தளங்களை.. இந்த மாதிரியான விடயங்களை அவர்கள் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறீர்களோ அவற்றின் key-word-களை எ.டுவாக..
"mail" என்றுக் கொடுத்துவிட்டால் அவர்கள் எந்த மெயில் தளங்களையும் பார்க்க இயலாது.. "game" என்றுக் கொடுத்துவிட்டால் எந்த game தளங்களையும் பார்க்க இயலாது..
எல்லா தளங்களையும் கண்டு ப்ளாக் செய்வதைவிட இந்த மாதிரி keywork-கள் கொண்டு ப்ளாக் செய்வது எளிது..

LATEST:

Grab the widget  Tech Dreams