குப்பை மெயில்கள் - குறைக்கும் வழி

7:16 AM வழங்கியவர் ameerdeen

1.நமது ஈமெயில் முகவரிகளை பொதுவான இடங்களில் உபயோகிப்பதை குறைக்க வேண்டும்.
உதாரணமாக செய்திகள் வெளியிடும் போது(News Group) அல்லது உரையாடல் செய்யும் போது,மேலும் சில வலைத்தளங்களை பார்வையிடும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
2.சில சமயங்களில் நமது ஈமெயில்களை பொதுவான இணையதளங்களில் கொடுக்க வேண்டாம்.
3.ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஈமெயில் முகவரிகளை பயன் படுத்தலாம்.ஒரு ஈமெயிலை தனிப்பட்ட விஷயத்திற்கும்,மற்றவை அலுவல விசயங்களை பொறுத்து பயன் படுத்தலாம்.
4.ஈமெயில்களை பொதுவான பெயர்களில் உருவாக்கமால்,தனித்தன்மையான பெயரில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
5.ஈமெயில் வடிகட்டி(filter) பயன்படுத்தலாம்.அதன் முலம் நமக்கு வரும் மெயிலகளை ஆராய்ந்து,தேவையற்றதை அழித்து மற்றவை நம்முடைய மெயில் பாக்ஸ்க்கு அனுப்பும்.பில்டர் க்கான சாப்ட்வேர்கள் சந்தையில் உள்ளன.
இதன் முலம் குப்பை மெயிலகளை பெருமளவில் குறைக்கலாம்.

LATEST:

Grab the widget  Tech Dreams