உலக சாதனை உங்கள் கையில்...

7:17 AM வழங்கியவர் ameerdeen

உலக சாதனைகளை தெரிந்து வைத்துக் கொள்வது மட்டுமல்ல, உலக சாதனையையே உங்களால் தீர்மானிக்க முடியும் என்று சொன் னால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் அற்புதமான தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் உறுப்பினராகி உலக சாதனைகளை நீங்களே முடிவு செய்யலாம்.
உலக சாதனை என்றவுடன் கின்னஸ் புத்தகம்தான் நினை வுக்கு வரும். கின்னஸ் புத்தகம் பல்வேறு பிரிவுகளில் உலக சாதனைகளை அங்கீகரித்து அது பற்றி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது அத்தனை எளிதல்ல. எல்லாவிதங்களிலும் சாதனை பற்றிய விவரங்களை உறுதி செய்து கொண்டே கின்னஸ் சாதனை முயற்சிகளை அங்கீகரிக்கிறது. நீங்கள் கின்னஸ் புத்தகத்தின் அபிமானியாக இருக்கலாம். அதில் இடம் பெற்றுள்ள அநேக சாதனை களை விரும்பி படித்து இருக்கலாம்.
இந்த அளவும் கூட கின்னஸ் சாதனை புத்தகத்தில் புதிதாக இடம் பெறும் சாதனைகள் உலக ளவில் பரவலான கவனத்தை பெறுகின்றன. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான சாதனை முயற்சி களும், பத்திரிகை மற்றும் நாளி தழ்களின் கவனத்தை ஈர்க்கின்றன. சாதனைகளுக்கு அப்படியொரு மதிப்பு மற்றும் வரவேற்பு இருக்கிறது.
ஆனால் பல சாதனைகள் குறித்து உங்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். இந்த நிலை யில்தான் உலக சாதனைகளை உங்கள் கைகளுக்கே கொண்டு வரும் வகையில் ரிக்கார்டு கப் டாட்காம் தளம் http://www.recordcup.com
தொடங்கப் பட்டுள்ளது.
இந்த தளத்தில் சாதனைகளை தீர்மானிக்க நீங்கள் சாதனையாள ராக இருக்க வேண்டும் என்ற அவசிய மில்லை. ஆனால் சாதனை என்று நினைக்கும் விஷயத்தை இங்கே அங்கீகாரம் பெற வைக்கலாம். அதாவது உலக சாதனையை நீங்களே தீர்மானிக்க முடியும்.
அதெப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். அதுதான் இன் டெர் நெட்டின் தனித்தன்மை.
தற்போது இன்டெர்நெட் உலகில் டிக் டாட் காம் இணைய தளம் மிகவும் பிரபலமாக இருப் பதை நீங்கள் அறிந்திருக்கலாம். உண்மையில் இந்த டிக் டாட் காம் இன்டெர்நெட்டில் புதிய போக்கை ஏற்படுத்திய முன்னோடி தளம்.
எந்த வகையான செய்திகள் முன்னிலை பெறுகின்றன என்பதை தீர்மானிக்கும் ஆற்றலை வாசகர்கள் கையிலேயே கொண்டு வந்து தந்த தளம் இது. செய்தி தளங்கள் முன் வைக்கும் செய்திகளை அப்படியே படிக் காமல், எந்த செய்தியை படிப்பது என்பதை இணையவாசிகளே முடிவு செய்யும் வகையில் இந்த தளம் செயல்பட்டு வருகிறது.
இந்த தளத்தின் செயல்பாட்டு முறை மிகவும் எளிதானது. இணைய வாசிகள் தாங்கள் முக்கியமாக கருதும் செய்தியை இந்த தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இணையவாசிகள் அந்த செய்தி யின் முக்கியத்துவம் குறித்து வாக்களிப்பார்கள்.
அதிக வாக்கு பெறும் செய்தி தளத்தின் முகப்புப் பக்கத்தில் இடம் பெறும். வாக்குகளை பெறத் தவறும் செய்தி பின்னுக்கு தள்ளப் பட்டு விடும்.
இவ்விதமாக இணையவாசி களே ஒரு சமூகமாக இணைந்து அவர்கள் தீர்மானிக்கும் செய்தி களே முன் வைக்கப்படுகிறது. இந்த தளம், செய்திகள் வெளி யிடப்படும் விதத்தில் புரட்சிகர மான மாற்றத்தை ஏற்படுத்தியி ருப்பதாக கருதப்படுகிறது. இந்த பாணியை பின்பற்றி பல் வேறு தளங்கள் உருவாகியுள்ளன. இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பது தான் ரிக்கார்டு கப் டாட் காம்.
இணையவாசிகள் தாங்கள் உலக சாதனை என்று கருதும் விஷயத்தை இந்த தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான வீடியோ ஆதாரத்தையும் இடம் பெற செய்ய வேண்டும்.
பின்னர் மற்ற இணையவாசிகள் அந்த சாதனை மீது வாக்களிப் பார்கள். போட்டி சாதனை இருந் தால் அதனையும் சமர்ப்பிப்பார் கள். எந்த சாதனை வெற்றி பெறு கிறதோ அது உலக சாதனையாக அங்கீகரிக் கப்படும்.
இவ்விதமாக யார் வேண்டுமானாலும் உலக சாதனையை சமர்ப்பிக்கலாம். தற்போது உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர் யார்? உயரமான கட்டிடம் எது? அழகான வாரிசு யார் என்பது போன்ற போட்டிகள் இந்த தளத்தில் அரங்கேறி வருகிறது.
உலக சாதனையை முற்றிலும் ஜனநாயகமயமாக்கி இருப்பதாக இந்த தளத்தை பாராட்டலாம்.
சுவாரசியமாக பொழுதை கழிக்க விரும்புபவர்கள் இந்த தளத்திற்கு சென்று இங்குள்ள உலக சாதனைகளையெல்லாம் படித்து, பார்த்து மகிழலாம்.

LATEST:

Grab the widget  Tech Dreams