கணினியில் இருக்கும் டிரைவ்களை மறைப்பது எப்படி?

8:25 AM வழங்கியவர் ameerdeen

நமது கணினியில் பல டிரைவ்கள் இருக்கக்கூடும். உதாரணமாக அவை கீழ்க்கண்டவாறு குறியீட்டு எழுத்துக்களால் அறியப்படும்.

மென் தகடு இயக்கி - ஃபிளாப்பி டிஸ்க் டிரைவ் - A
மென் தகடு இயக்கி - ஃபிளாப்பி டிஸ்க் டிரைவ் - B
வன் தகடு - ஹார்டு டிஸ்க் - C
வன் தகடு - ஹார்டு டிஸ்க் - D
குறுவட்டு இயக்கி - சி.டி டிரைவ் - E

(எத்தனை வன் தகடுகள் பகுதி உள்ளனவோ அதைத் தொடர்ந்த இயக்கியாக மட்டுமே குறுவட்டு இயக்கி வரும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதாவது உங்களிடம் இருப்பது

ஹார்ட் டிஸ்க் - C மட்டுமே என்றால் சி.டி. டிரைவ் - D என்று வரும்.
ஹார்ட் டிஸ்க் - C மற்றும் D என்றால் சி.டி. டிரைவ் - E என்று வரும்.
ஹார்ட் டிஸ்க் - C,D மற்றும் E என்றால் சி.டி. டிரைவ் - F என்று வரும்.

இப்படியே தொடர்ந்து வரும் என்பதை நினைவில் கொள்ளவும். அல்லது இயக்கிகளின் குறியீட்டு எழுத்து என்ன என்பதை அறிந்து கொள்ள மை கம்ப்யூட்டரைத் (My computer) திறந்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.)

இப்போது கணினியில் சில ரகசியங்களை பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினால், அப்படிப்பட்ட கோப்புகளை குறிப்பிட்ட வன் தகட்டில் சேமித்து, அந்த வன் தட்டின் பகுதிகளை சாதாரணமாக கணினியை இயக்குபவர்கள் கண்ணில் படாதவாறு மறைக்க இயலும். அவ்வாறு நாம் மறைக்க விரும்பும் பகுதி எதுவாக வேண்டுமென்றாலும், மென் தகடு இயக்கியாகவோ, குறுவட்டு இயக்கியாகவோ இருந்தாலும், மறைக்க இயலும்.)

இதை எவ்வாறு செய்வது என்பதைக் காண்போம்.

எச்சரிக்கை: நாம் செய்யப்போகும் மாற்றங்கள் Registry-யில் என்பதால் மிகுந்த கவனம் தேவை. சிறு பிழை கூட கணினியை செயலிழக்க வைக்கக்கூடும் என்பதை எப்போதும் மறவாதீர்கள். பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

1. "Start" பொத்தானை அழுத்தி, "Run" கட்டளையை தேர்வு செய்யுங்கள்.

2. வரும் திரையில் regedit என்று தட்டச்சி OK பொத்தானை அழுத்துங்கள்.

3. HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer பகுதிக்கு செல்லுங்கள்.

4. வலது பக்க திரையில் எலிக்குட்டியின் வலது பொத்தானை அழுத்துங்கள்.

5. New - DWORD value என்பதை தேர்வு செய்து, அதற்கு NoDrives எனப்பெயரிடுங்கள். (NoDrives என்பதில் இடைவெளி இல்லை என்பதை மறக்க வேண்டாம்.)

6. NoDrives- ன் மதிப்பு பூஜ்யமாக (0) இருக்கும் வரைக்கும், கணினியில் வேலை செய்யும் போது எல்லா டிரைவுகளும் நமக்குத் தெரியும்.

7. இப்போது கீழே தரப்பட்டிருக்கும் அட்டவணைப்படி, எந்த டிரைவை மறைக்க விரும்புகிறோமோ அதை தேர்வு செய்ய வேண்டும்.

8. NoDrives என்பதை எலிக்குட்டியின் வலது பொத்தானால் அழுத்தவும்.

9. Modify என்பதை தேர்வு செய்யவும்.

10. வரும் திரையில் கவனமாக "Decimal" என்பதை தேர்வு செய்யவும்.

Drive Value
A: 1
B: 2
C: 4
D: 8
E: 16
F: 32
G: 64
... ....
Z: 33554432
All Drives: 67108863

உதாரணமாக நீங்கள் மென் தகடு இயக்கி A: -ஐ மட்டும் மறைக்க விரும்புகிறீர்கள் எனில் மதிப்பை 1 என்று தரவேண்டும்.

A: மற்றும் D: டிரைவுகளை மறைக்க விரும்பினால், அந்த டிரைவுகளின் மதிப்பை கூட்டிக்கொள்ள வேண்டும். அதாவது 1+8=9 என்று வரும். ஆகவே மதிப்பாக 9 என்று தர வேண்டும். இப்படியே நாம் எத்தனை டிரைவுகளை வேண்டுமானாலும் மறைக்க இயலும்.

11. மதிப்பை உள்ளீடு செய்து விட்டு ரெஜிஸ்டிரியை விட்டு வெளியேறி விடுங்கள்!

12. மேலும் இன்னும் ஒரு முறையைக்கூட கையாளலாம். கணினியை உபயோகிப்பவர்களுக்கு "டிரைவ்" இருப்பது மட்டும் தெரியும். ஆனால் அந்த டிரைவில் என்ன இருக்கிறது என்பதை அவர்களால் பார்க்க இயலாதவாறு செய்ய முடியும். அவ்வாறு செய்ய வேண்டுமெனில் மேலே குறிப்பிட்ட வழிமுறைகளைக் கையாண்டு, புதிய DWORD value என்பதில் NoViewOnDrive என்று உருவாக்கி, அட்டவணையில் குறிப்பிட்ட மதிப்பைத் தருவதன் மூலம் செய்யலாம்.

LATEST:

Grab the widget  Tech Dreams