கப்பலின் நங்கூரம் (anchor) எப்படி வேலை செய்கிறது?

6:39 PM வழங்கியவர் ameerdeen

கப்பலின் நங்கூரம் (anchor), நம்முடைய காரில் இருக்கும் handbrake
போன்றது என்று சொல்லலாம். அது ஓடும் காரை நிறுத்த பயன்படுத்த
முடியாது, ஆனால் நிற்கும் கார் உருளாமல் பார்த்துகொள்ளும்
அல்லவா??? அதாவது static friction-ஐ எதிர்கொள்ள அதிக விசை
தேவை, எனவே சிறிய அளவு braking இருந்தாலும் கார் நகராமல்
பார்த்து கொள்ளலாம் அல்லவா??? இதியே மனதில் வைத்து
கொண்டு... இப்போ நங்கூரத்தை பற்றி பார்க்கலாம்...


மண்வெட்டியால் மண்ணை வெட்டுகிறோம், வெட்டி விட்டு என்ன
செய்வோம், இளக்குவோம் அல்லவா... இப்போது இளக்காமல்
உங்களை நோக்கி இழுத்து பாருங்கள்... வராது... மண்வெட்டி
உடைந்த்து போகும் (நீங்கள் பலசாலியாக இருந்தால்)..... இதர்கு
காரணம் மண் எளிதாக shear force-சினால் பிரிக்கபட்டு விடும்...

ஒரு நங்கூரம் வடிவமைக்கபடும் போது அது காற்றினாலோ,
அலைகளின் இழுப்பினாலோ இழுத்து செல்லாமல் இருக்க
வடிவமைக்கபடுகிறது. நங்கூரம் இட்ட கப்பல் இழுக்கபடும் போது மண்
இருக்கும் சமவெளி பரப்பில் இழுக்கபடும் (parallel to the plane of
the land), எனவே நங்கூரத்தின் கைகள் (arm and flukes) மண்ணினுள்
புதைந்து இருக்கி பிடித்து கொள்ளும். மண் அழுத்தத்தினால் பலமாகி
கொள்ளும் (sand is good in compression)இதனால் கப்பல் நகராமல்
பார்த்து கொள்ளும்...

கவனிக்க: இங்கு கப்பல் நங்கூரம் கப்பலில் காற்று மற்றும் அலையின்
விசைகளை மட்டுமே தடுக்கிறது...

இப்போது கப்பல் நகர வேண்டும் என்றால், மாலுமி நங்கூரத்தை
மேலே இழுக்க , அது மண்வெட்டி மண்ணை தோண்டுவது போல்
மேலே வரும், இங்கு அந்த மண் shear failure ஆகி எளிதாக மேலே
வரும்....

Naval architechture படிப்பவர்கள் நங்கூரம் வடிவமைப்பதையே ஒரு
பாடமாக படிப்பர்.. அதில் அத்தனை விஷயங்கள் உள்ளன.. நான்
எனக்கு தெரிந்த ஏதோ சிலவற்றை கொடுத்தூள்ளேன்....

LATEST:

Grab the widget  Tech Dreams